பதக்கம் வெல்லாமலே மக்கள் மனதில் இடம் பிடித்த மல்யுத்த வீராங்கனை அரசியலில் நுழைந்துள்ளார்...!
Written By : MYTHILI.N 07-10-2024 02:45:28 PMநீங்களே எங்களுடைய விலைமதிப்பற்ற தங்கம் என வலைதளங்களில் போற்றப்பட்ட, மக்கள் மனதில் இந்த வருட பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நீங்கா இடம் பிடித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
வருகிற அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஒலிம்பிக்கில் எடை அதிகமாக இருந்ததால் பதக்க வாய்ப்பை நழுவ விட்டார் வினேஷ போகத் இனி எனக்கு தெம்பு இல்லை என்றும் இதிலிருந்து ஓய்வு பெறுவதாகவும்அறிவித்தார் ஆனால் யாரும் எதிர் பார்க்காத விதமாக அரசியலில் களம் இறங்கியுள்ளார்.
இதன் பின்னணி என்ன 30 வருடங்களாக விளையாட்டில் ஆர்வம் காட்டி பல போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல போன்ற பல பதக்கங்களை வென்று ஒலிம்பிக் வரை சென்ற வீரங்கணயை அடித்து ஓடவிட்டது எண்பதே இங்கு மிகையாகாத பின்னணி.
ஓவ்வொரு நபரும் தோல்விகளை கண்டு அஞ்சுவதில்லை அதற்கு பதிலாக வழுபெற்றே சாதனை புரிகின்றனர். என்ன செய்வது நட்டு மக்கள் கோரிக்கை வைத்தாலும், போராடினாலும் அதிகாரிகள் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவதில்லை அவர்களே ஒவ்வொரு வெற்றிக்கு பின்பும் உள்ளனர் யார் என்பதை நிர்ணயம் செய்ய. மக்களாட்சியாம் மக்களாட்சி.
விளையாடி வெற்றி பெறும் சமயத்தில் உடல் எடையை பார்ப்பதும், சரியானவரா இல்லை ஆள் மாராட்டமா என்று வெற்றி பெற்ற பின்பு விசாரிக்கும் அளவுக்கு தான் அனைத்து துறையும் உள்ளது.
நாட்கள் செல்ல செல்ல அனைவரது மனதிலும் நம்பகத்தன்மை இழந்து வருகிறது. ஒரு ஒரு மனிதனுக்கும் நேர்கின்ற சில விஷயங்கள் தனி மனிதனை மட்டும் இன்றி நாட்டு மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எங்கோ யாரோ செய்த செயல் வலைதளங்கள் மூலம் மக்களை வந்து சேர்கிறது அச்செய்தி நம்மில் பலரை பல செயல்களை செய்ய வைக்காமல் தடுக்கிறது. குறிப்பாக பெண்களையே குறிவைத்து அனைத்து செயல்களும் நடப்பதாகவே நாளுக்கு நாள் அனைத்து செயல்களும் நடந்து கொண்டு இருக்கிறது.
சக உயிர்களை காக்க வேண்டிய பொறுப்பு மிக்க மனிதர்களாக மாறுவோம்.