இந்த ஒரு மாத்திரை போதும் இனி உடல்பயிற்சியே செய்ய வேண்டாம்..!
Written By : MYTHILI . N 02-12-2024 04:14:58 PM
டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு மாத்திரையை உருவாக்கியுள்ளனர், இது 10 கிமீ வேகத்தில் ஓடும் பொழுது ஏற்படும் வியர்வையை உடைக்காமல் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற விளைவுகளை உண்டாக்கி உடல்பயிற்சி செய்தது போல் உடலில் மாற்றத்தை கொண்டு வரும்.
ஒருவர் கடுமையான உடல்பயிற்சி செய்யும் பொழுது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒரு மூலக்கூற்றை லேக் என்று அழைக்கிறார்கள். இதைத்தான் மாத்திரியாகவும் உருவாக்கியுள்ளனர். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உடல்பயிற்சி செய்ய 10 கி.மீ ஓடுவதற்கு ஏற்றவாறு உடலில் வளர்சிதை மற்றத்ததை இந்த மூலக்கூறு கொண்டு வருகிறது என்கிறார் ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மற்றும் வேதியியலாளர் டாக்டர் தாமஸ் பால்சன் நியூயார்க் போஸ்ட்டிடம்.
Lake முதலில் எலிகளுக்கு செலுத்தி சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. உண்மையாகவே அது நச்சுகளை வெளியேற்றி, இவற்றின் இதயத்தை பலப்படுத்துகிறது.
உடற்பயிற்சிக்கு உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது அதை Lake மாத்திரை எவ்வாறு உடலில் செயல் படுகிறது?? வெறும் வயிற்றில் கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும்போது இரத்த பிளாஸ்மா மட்டத்தில் லாக்டேட் என்ற வேதிப்பொருளில் விரைவான ஸ்பைக்கை ஏற்படுத்துகின்றன, அதைத் தொடர்ந்து பீட்டா-ஹைட்ராக்ஸிபியூட்ரேட் (BHB) எனப்படும் மற்றொரு வேதிப்பொருளும் சேர்ந்து படிப்படியான அதிகரிப்பை ஏற்படுகிறது. போதுமான குளுக்கோஸ் இல்லாத நிலையில் உடல் ஆற்றலுக்காக கொழுப்பை உடைக்கும் போது கல்லீரலில் கீட்டோன்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த இரண்டு இரசாயனங்களும் பசியை அடக்குவதற்கும், இதய நோய், நீரிழிவு நோய் அபாயத்தை குறைப்பதற்கும், அறிவாற்றல் செயல்பாட்டைத் தூண்டுவதற்கும், மனச்சோர்வைப் போக்குவதற்கும் உதவுகின்றன. நீங்கள் உடல்பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் அதே மாற்றம் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும் பொழுது எலும்புத் தசைகளுக்கு அடிப்படையாக உதவி செயல்படுகிறது.
உடல்பயிற்சி மாத்திரைக்கான சோதனை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு மாத்திரை உடல்பயிற்சிக்கு ஈடு கொடுக்க முடியும் என்றபோது உடல்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கும், வயதானர்வர்களுக்கும், உடல்நிலை சரி இல்லாதவர்களுக்கும் பயன்படும் என்றாலும் படுத்த படுக்கையாக உள்ளவர்களுக்கு அவர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவது கடினமானதாகும் அவர்களுக்கு இதை தவிர்ப்பது நல்லது.