ஏன் என கேள்வி எழுப்பும் வகையில் "திரையுலகில் நிலவி வரும் விவாகரத்து" நிகழ்வுகள்..!
Written By : MYTHILI . N 27-11-2024 11:51:27 AMசமீப காலமாக திரையுலகில் நிலவி வரும் விவாகரத்து பட்டியல் பெருகிய நிலையில், மக்களிடையே பேசும் பொருளாகி உள்ளது. மேலும் ஏன் இத்தனை வருடம் கழித்து விவாகரத்து வாங்குகிறார்கள், இவர்களுக்கு விவாகாரத்தா என்று ஆச்சரியம் கொள்ளும் வகையில் கேள்விகள் எழுகின்றன.
இசையமைப்பாளர் இமான், ஜிவி பிரகாஷ் , நடிகர் ஜெயம்ரவி ஆகியோரை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் தனது மனைவி உடனான விவாகரத்தை சமீபத்தில் அறிவித்துள்ளார்.
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்ப கால கட்டங்களில் இருந்தே சிறந்த இசைகளை அமைத்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். தென்னிந்திய அளவில் புகழடைந்து பெரும் பேறு பெற்றுள்ளார்.
இசை மட்டுமல்லாமல், நடிகர்களும் தங்களது நிஜ வாழ்கையில் இன்னொரு வாழ்க்கை உள்ளது , இது வெறும் தொழில், (அல்லது) இன்னொரு நிஜ முகம் எங்களுக்கும் உண்டு குடும்பசூழல் அனைவரையும் போன்று எங்களுக்கும் இருக்கிறது என்பதை இது போன்ற செய்திகள் நம்மை உணரவைக்கிறது.
கேமரா முகங்கள் கதைக்கு மட்டுமே உண்மை. கேமரா இல்லாமல் நடிகர்களுக்கும் தனி சுபாவம், இனிப்பு, கசுப்புனு வாழ்க்கைல நிறைய இருக்கும் இத தெரியாத மக்கள் இன்னும் போலி முகங்களுக்காக கொண்டாடி சிலை வைக்கிறாங்க.
ஏ.ஆர்.ரஹ்மானுடனான விவாகரத்து செய்தி வெளியானதும் விமர்சனங்கள் எழ ஆரம்பமான நிலையில சாய்ரா பானு அறிவித்த தகவல்: தனக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சில மாதங்களாக மும்பையில் தங்கி இருக்கிறேன், ஏ.ஆர்.ரஹ்மான் உடனான பிரிவுக்கு அதுவே காரணம் என்றும் ஏ.ஆர். ரஹ்மான் சிறந்த மனிதர் அவர் என் வாழ்வை விடவும் பெரியவர். குழந்தைகளுக்கு நல்ல அப்பா நல்ல கணவர், நான் கேட்டு கொள்வது அவர் பெயருக்கு எந்த கலங்கமும் வரக்கூடாது என்று தான் .
யூடியூபர்கள் மற்றும் தமிழ் ஊடகத்திடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம், அவர் மிகவும் அற்புதமான மனிதர். உலகிலேயே சிறந்த மனிதர் அவர். நான் சிகிச்சை முடிந்ததும் விரைவில் சென்னை திரும்புவேன் என்று கூறியுள்ளார்.
திரையுலகில் பெருகி வரும் அடுத்து அடுத்தான விவாகரத்து செய்தி மக்களிடையே திரையுலகம் மேல்லிருந்த மதிப்புகளை வெகுவாக இழந்து வருகிறது.