8 நாள் 8 மாதம் ஆன கதை.... இல்ல இல்ல உண்மை சம்பவம்!!! விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ்ன் நிலை என்ன..!
Written By : MYTHILI.N 07-10-2024 04:54:04 PMபஸ்ச விட்டு இறங்கி கீழ வர பூமி இல்ல முருகேசா அண்ணாந்து பாத்திலே கண்ணுக்கே தெரியாத தூரம். விழுந்தா மண்ட ஒடைர சமாச்சாரம் இல்ல உசுறே போர விஷயம் டா. போ போய் எல்லார்கிட்டயும் நடக்ற விஷயத்த சொல்லு.
விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்திற்கு அழைத்து செல்ல நாசா ஒரு திட்டம் தீட்டி வந்தது. அதற்காக போயிங் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கு இடையே போட்டி எழுந்தது இருந்தும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் விண்கலமே பயன் படுத்தபடும் என நாசா ஒப்புதல் அளித்தது.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை சோதனை செய்ய, ஜூன் 5 ஆம் தேதி அமெரிக்கா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 8 நாட்களில் பூமி திரும்பி விடுவதாக நினைத்து சென்ற இவர்கள் இன்று வரை பூமி திரும்பவில்லை. இவர்களை விண்வெளிக்கு அனுப்பிய நாசாவின் திட்டம் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றும் சொல்லலாம்.
பயணம் தொடங்கியபோதே ஸ்டார்லைனர் விண்கலத்தில் சிக்கல் ஏற்பட்டது. உந்துவிசை அமைப்பில் கசிவுகள் மற்றும் ஹீலியம் வாயு கசிவு போன்ற தொழில்நுட்ப காரணங்களால் அவர்கள் அங்கேயே இருக்கும் நிலமை ஏற்பட்டது. மேலும் அதே விண்கலம் மூலம் பூமி திரும்பவும் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் நாசா ஒரு திட்டம் தீட்டி உள்ளது. இந்த மாதம் செப்டம்பரில் விண்வெளி வீரர்களை, ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலத்தைப் பயன்படுத்தி பூமிக்கு அழைத்து வருவது என்றும் அதை விண்வெளிக்கு அனுப்புவதாகவும் அறிவித்தது. இந்நிலையில் அவர்கள் பிப்ரவரி 2025ம் ஆண்டு ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புவார்கள் என்று
நாசா அறிவித்துள்ளது. போயிங் நிறுவனத்திற்கு இது ஒரு பலத்த அடியாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் அதன் அனுபவம் வாய்ந்த க்ரூ டிராகன் விண்கலத்துடன் போட்டியிடத் தொடர்ந்து முயன்று வருகிறது இந்நிறுவனம்.
விண்வெளிக்கு இவர்கள் செல்வதற்கு ஒரு மாதம் முன்பே விண்வெளிக்கு உணவு அனுப்பி வைக்கப்படும். பல ஆராய்ச்சிகளுக்கு பின்பே உணவுகள் அனுப்பி வைக்கபடுகிறது. அவர்கள் விரும்பும் உணவுகளும் அதனுடன் பால், பீன்ஸ், பழம், காய்கறிகள், குளிர் கப்பி ஆகியவையும் அடங்கும். மேலும் இவர்களுக்கான உணவு மற்றும் எரிபொருட்கள் கடந்த நாட்கள் முன்பு கார்போ விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. மூன்று டன் எடையை விண்கலம் சுமந்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை உபயோக படுத்தப்படும் அளவிற்கே உணவுகளின் பேக்கேஜ் செய்யப்படுகிறது.
செய்தியாளர் சந்திப்பில் காணொளி அழைப்பு மூலம் பேசிய :
சுனிதா வில்லியம்ஸ், மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ளதாகவும், புட்ச் வில்மோர் இதற்கு முன்பு இரண்டு முறை விண்வெளிக்குச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் பேசிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்புவது குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும், ஸ்டார்லைனரின் செயல்திறன் உண்மையில் அபாரமானது என்றும் கூறினார்கள்.