தினசரி உணவில் சேர்க்க வேண்டிய காய்கறிகளில் இதுவும் ஒன்று..!
Written By : MYTHILI.N 08-10-2024 12:14:52 PMபப்பாளியை இன்றைய நாளில் பெண்களே அதிகம் உட்கொள்கின்றனர். காரணம் சரும பொழிவிற்கும், மாதவிடாய் பிரச்சினைக்கும் தங்கள் பயன்பாட்டில் வைத்து கொள்கின்றனர்.
நம்மில் சிலர் பப்பாளி காயை அதாவது பலுக்கும் சில நாட்களுக்கு முன்னரே வெள்ளரி போன்று காயாகவும் விரும்பி சப்பிடுவதுண்டு. மிளகாய் பொடி, உப்பு சேர்த்து ருசிக்காக சாப்பிடும் பப்பாளி காயில் மொத்தம் மூன்று வைட்டமின்கள் உள்ளன.
வைட்டமின் ஏ, சி, இ.பெரும்பாலும் நம் உணவில் நார் சத்து உள்ள பொருட்கள் மிகவும் குறைவு என்பதாலே கருவேப்பிலை, கொத்தமல்லி தலைகளை சேர்த்து சாப்பிட சொல்லுவார்கள். பப்பாளி காயில் நார் சத்து அதிகம் உள்ளது என்பதால் உடலின் குடல் நலத்திற்கும் உதவியாக உள்ளது. பப்பாளி காய் செரிமான பிரச்சனையையும் அகற்றுகிறது.
சருமத்திற்காக மட்டுமே பயன் என்று நினைத்து கொண்டிருந்த நமக்கு இந்தியாவின் பல்வேறு சமையல் வகைகளில் பப்பாளி காய் இடம்பெற்றிருக்கிறது என்று தெரியவில்லை. பப்பாளி காயை கேரட், பீட்ரூட் போன்று சீவி பொரியல் போன்றும் உண்கின்றனர்.
நமக்கு தெரியாத பல உணவுகளின் நன்மைகளை நாம் அறிந்து உண்டால் பல நன்மைகள் கிடைக்கும். பெரிதும் வீடுகளில் "எத்தனை நாள் இதையே
செஞ்சிட்டு இருப்ப வேற எதாவது புதுசா செய்யலாம் இல்லனு" எல்லோறோட வீட்டுலையும் இந்த சத்தம் இருக்கும். அதுக்கு இனி இடமே இல்ல இப்படி நம்மை சுற்றி உள்ள காய்கறிகளை வைத்தே சுவையாகவும், ஆரோக்கியமாகவும் சமைத்துண்ணலாம்.