சுலபமா 10th, 12th சர்டிபிகேட் மட்டும் இல்ல இன்னும் நிறைய சர்டிபிகேட்ட ஆன்லைன்லயே டவுன்லோட் செய்யலாம்...!
Written By : MYTHILI.N 08-10-2024 06:39:09 PMநம்ப தமிழ்நாடு கவர்மென்ட் உங்களுக்கு தேவையான உங்களோட ஒரிஜினல் சர்டிபிகேட்ஸ் எல்லாவற்றையும் எந்த நேரத்துலையும் நீங்களே ஆன்லைன்ல டவுன்லோட் பண்ண புதிய சேவைய அறிமுகம் படுத்தி இருக்காங்க .
நீங்க வீட்டுல இருந்தே உங்க போன்லேயே இத நீங்க பண்ணிக்கலாம்.
ஆன்லைன் சேவைகளை விரிவு படுத்தவும் மக்களுக்கு நேரடி சேவையை வழங்கவும் இப்படி பட்ட திட்டங்களை தமிழ்நாடு கவர்ன்மென்ட் அறிமுகப்படுத்தி வருகிறது.
பணத்த வேஸ்ட் பண்ணாம பத்தே நிமிடத்தில் எப்படி டவுன்லோட் செய்யலானு தெரிஞ்சிக்கிட்டு போங்க.
என்ன சர்டிபிகேட்ஸ்லாம் டவுன்லோட் பண்ணலாம்
10th,12th Mark sheet, Diploma, Nativity, Income, முதல் பட்டதாரி, OBC சர்டிபிகேட்
இத எப்படி டவுன்லோட் பண்ணலாம்
லிங்க்- யை கிளிக் செய்து ஆதார் எண்ணை என்டர் கொடுத்தாலே போதும் உங்களுக்கு தேவையான சர்டிபிகேட்ஸ்-யை எப்போவேனா டவுன்லோட் செஞ்சிக்கலாம் உடனுக்குடன். பத்திரம், பட்டா போன்ற சேவைகளையும் ஆன்லைன் மூலம் பெற ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் இச்சேவைகளும் அறிமுகமாக உள்ளது.
டிஜிட்டல் உலகில் வாழும் நமக்கு எத்தனை பேருக்கு இச்சேவைகளைப் பற்றி தெரியும் என்பது அரிதே.
https://www.epettagam.tn.gov.in/ CLICK HERE