புதுப்பிக்கப்பட்ட UPI ட்ரான்ஸாக்க்ஷன் வரம்பு செப்டம்பர் 16 முதல் அமலுக்கு வந்துள்ளது..பல விதமான பேமண்டுகளுக்கு புதிய ட்ரான்ஸாக்ஷன்கள்..!
Written By : MYTHILI N 15-10-2024 04:16:24 PMஇந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) UPI பயன்படுத்தி சில கட்டணங்களுக்கான ட்ரான்ஸாக்க்ஷன் வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்தியுள்ளது.
இதற்கு முன்பு குறிப்பிட்ட சில தொகையை மட்டுமே UPI அதாவது Google pay, phone pay மூலம் பணத்தை ஒருவருக்கு ஒருவர் அனுப்பவோ பெறவோ முடியும் ஆனால் இப்பொழுது அந்த தொகை அதிகரித்துள்ளது.
பெரிய தொகையை அவ்வளவு சுலபமாக ட்ரான்ஸாக்க்ஷன் செய்ய இயலாது. நம்மில் பலர் இந்த சிக்கல்களை அனுபவித்திருப்போம் ஆனால் இப்பொழுது சில வரம்புகளுடன் UPI பரிவர்த்தனை தொகையை உயர்த்தியுள்ளது நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா.
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஐபிஓக்கள் மற்றும் RBI சில்லறை நேரடித் திட்டங்கள் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கும் புதிய UPI ட்ரான்ஸாக்ஷன் வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் ஒரு மருத்துவமணைக்கோ , கல்வி நிறுவனங்களுக்கோ, ரிசர்வ் வங்கியிடம் இருந்து நிதி அல்லது நிதி சார்ந்த திட்டங்களை பெறும் பொழுது 5 லட்சம் வரை பெறவும் முடியும் அந்நிறுவனங்களுக்கு அனுப்பவம் முடியும்.
ட்ரான்ஸாக்க்ஷன் வரம்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணம் நாட்டிலுள்ள மில்லியன் கணக்கான வரி செலுத்துவோருக்கு உதவுவதற்காகவே, இப்போது தனிநபர்கள் செப்டம்பர் 16 முதல் ஒரு ட்ரான்ஸாக்க்ஷன்க்கு ரூ.5 லட்சம் வரை வரி செலுத்த யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸை (UPI)-யைப் பயன்படுத்த முடியும்.
இந்த முடிவு வரி செலுத்தும் செயல்முறையை எளிதாக்குவதையும், அதிக மதிப்புள்ள ட்ரான்ஸாக்க்ஷன்களை பயன்படுத்த, அதிகமான மக்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அதிகரிக்கப்பட்ட வரம்பு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
UPI இன் சிறப்பு அம்சம் என்னவென்றால், UPI கணக்கு வைத்திருப்பவர்கள் நம்பகமான ட்ரான்ஸாக்க்ஷன்களை வழங்குவதற்கு உதவுகிறது, இது பாதுகாப்பு மற்றும் வசதி இரண்டையும் மேம்படுத்துகிறது மற்றும் மோசடிகளை தடுக்க முற்றிலும் உதவுகிறது.
பியர்-டு-பியர் பேமெண்ட்டுகளுக்கான நிலையான UPI பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சம். இருப்பினும், தனிப்பட்ட வங்கிகள் தங்கள் சொந்த UPI வரம்புகளை அமைக்கலாம். எவ்வளவு வேண்டுமானாலும் இரண்டு அல்லது மூன்று லட்சமாக கூட நிர்ணயம் செய்யலாம். (பி 2 பி) என்றால் ஒரு நபர் இன்னொரு நபரிடம் ட்ரான்ஸாக்க்ஷன் செய்வதுதில் மூன்றாம் நபரை சேர்க்காமல் வாங்குபவரும் விற்பவரும் நேரடியாக P2P சேவையின் மூலம் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை செய்கிறார்கள்.
பல்வேறு வகையான UPI பரிவர்த்தனைகளுக்கு பரிவர்த்தனை வரம்புகள் உள்ளன. மூலதனச் சந்தைகள், வசூல், இன்சூரன்ஸ் மற்றும் வெளிநாட்டு உள்நாட்டில் பணம் அனுப்புதல் தொடர்பான UPI பரிவர்த்தனைகள் ஒரு நாளைக்கு ரூ. 2 லட்சம் வரை வரம்பைக் கொண்டுள்ளன.
UPI கடந்த சில அடுங்களாகவே இந்தியாவில் பெருகி வருகிறது. டிஜிட்டல் சேவைகளில் இது மிக பெரிய பங்காற்றி வருகிறது.
https://www.npci.org.in/what-we-do/upi/product-overview CLICK HERE