இரண்டுமே முக்கியம் தாங்க உடலுக்கான ஓய்வும் மனசுக்கான ஓய்வும்..!
Written By : MYTHII N 15-10-2024 04:22:40 PMவழக்கம் போல எழுந்து அன்றாட வாழ்க்கைய வாழுறோம். சில நல்ல விஷயங்கள செய்யறதுக்கான நேரம் உண்மையாவே உள்ளதா??
இல்லை என்று தான் சொல்வோம். அப்படி என்ன அந்த நல்ல விஷயங்கள்,வேற என்ன ஓய்வு தான். அன்றாடம் உடலுக்கு மட்டும் குறைந்த பட்சம் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் ஓய்வு கொடுக்கிற நம்ப மனசுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குறோம்.
மன ஆரோக்கியத்திற்கான சில வழிகள், இத நிச்சயமா கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்ல வாழ்க்கையோடையே பழகி போய்டுனுதா சொல்லனும். முதல்ல தனிமைக்கான நேரத்த கொடுங்க. வானத்த பார்த்து சில நிமிடங்கள் அன்றைய நாளில் நடந்தவைகளை நினைவூட்டுங்கள். சில நிபுணர்கள் வானத்தை பார்ப்பதனால் மனதிற்கு நிம்மதி கிடைப்பதாக கண்டறிந்துள்ளனர். தினமும் தியானம் செய்தால் மனசுக்கு அமைதி மட்டும் அல்ல உங்களை நீங்களே அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை நீங்களாகவே ஏற்படுத்தி கொள்வதற்கான நல்ல வழியாகவும் அமையும்.
நடிகை ராஷ்மிகா மந்தனா மகிழ்ச்சியாக வாழ சில யோசனைகளை கூறுகிறார்:
நல்ல உணவை சாப்பிடுங்கள். காலையில் எழுந்தவுடன் கொஞ்சம் காபி அருந்துங்கள் அது உற்சாகம் தரும். பயணம் செய்யுங்கள்.புத்தகங்கள் படிப்பது நல்ல பழக்கம். பிடிக்காத வேலையை செய்யாதீர்கள் பிடித்த வேலையை செய்து மகிழ்ச்சியாக இருங்கள். உடலுக்கு தேவையான தூக்கம் அவசியம் என்கிறார்.
நம் வாழ்க்கையில் இப்படி சிறு சிறு விஷயங்களை செய்தாலே போதும் உடலுக்கு மட்டும் இன்றி மனதிற்கும் ஆரோக்கியம் கிடைக்கும். ஒட்டுமொத்த உடலையும் ஆக்கிரமித்து சங்கமம் செய்ய வைப்பதில் மனதிற்கும் முக்கிய பங்குண்டு.