புதிதாய் கல்யாணம் ஆனவர்களை முருங்கைக்காய் சாப்பிட சொல்லுவது ஏன் தெரியுமா..?
Written By : MYTHILI . N 15-10-2024 04:29:10 PMமுருங்கைக்காய் பாமர மக்களுக்கும் எளிதாய் கிடைக்க கூடிய வகைகளில் ஒன்று. கிராமங்களில் கேட்பாரற்று எளிமையாக கிடைக்கிறது முருங்கை.
நேரம் கிடைக்காததால் பெரும்பாலான வீடுகளில் முருங்கை கீரையை பொரியல் செய்வதில்லை எனினும் இதில் எத்தனை நன்மைகளும் வைட்டமின்களும் ஆண்மை சக்திக்கு பயனளிக்கிறது தெரியுமா, வாங்க என்ன என்பதை பார்க்கலாம்.
முருங்கை காய், இழை ( கீரை ), விதை போன்றவற்றின் பயன்கள் யாருக்கு தெரிகிறதோ இல்லையோ, முருங்கை காய் சாம்பார் என்றாலே கிண்டல்கள் தான் முதலில் வரும் என்பது பலருக்கும் தெரியும். முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி, போன்ற சத்துக்கள் உள்ளதால் இது பெரும்பாலும் ஆண்களின் விந்து வளர்ச்சிக்கு நல்ல பயன் அளிக்கிறது. அதிகம் லேகியம் தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
முருங்கை விதைகளில் 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் இருக்கிறது. முன்பெல்லாம் முருங்கையை மருத்துவத்திற்கு பயன் படுத்தினார்கள் நம் முன்னோர்கள். முருங்கை விதையை உலர்த்தி பொடியாக்கி பசும்பாலுடன் கலந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் ஆண்களுக்கு நல்ல பயன் கிடைக்கும். மருத்துவரின் ஆலோசனையை அணுகி கேட்டறிந்து செய்வது நன்று.
பெண்களுக்கும் பயன் தரும் முருங்கை:
சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்புக்கும் முருங்கை காய் நல்ல பயனளிக்கிறது. மேலும் இடுப்புவலி, எலும்பு போன்றவற்றிற்கும் பல நன்மைகளை அளிக்கிறது. முருங்கைக்காயில் கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எலும்புக்கு இச்சத்துக்கள் வலு கொடுப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான உணவாக உள்ளது.