க்ரிப்டோகரன்சி யா அப்படின்னா என்ன இதுக்கு முன்னாடி கேள்வி பட்டு இருக்கீங்களா..?
Written By : MYTHILI . N 17-10-2024 07:00:32 PMக்ரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் வடிவ நாணயம் ஆகும். இது நாம் உபயோகப்படுத்தும் சில்லறை, நோட்டுகளை போன்று அல்ல. இது முழுக்க முழுக்க டிஜிட்டல் வடிவத்திலேயே இருப்பதால் இது ஆன்லைனில் பரிமாறி கொள்ளும் நாணயங்கள் ஆகும்.
முதன் முதலில் 2009ல் சடோஷி நகமோடோ (புனைப்பெயர்) என்பவர் தான் பிட்காயின் என்ற க்ரிப்டோ கரன்சியை உருவாக்கினார். இந்த பிட்காயினுக்குப் பிறகு பல கிரிப்டோகரென்சிகள் உருவாகிவிட்டன.
இன்றைய நிலையில் ஒரு பிட்காயின்களின் இந்திய பண மதிப்பீட்டின்படி 54 லட்சத்து இருபத்தி ஏழாயிரம் ஆகும். புதிதாக ஒரு காயினை உருவாக்குவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல.
உலகம் முழுவதும் செலவிடப்படும் மதிப்பு அதாவது டாலர்கள், ரூபாய் நோட்டுகள், பவுண்டுகள் எல்லாம் சேர்த்து மொத்தம் 80 ட்ரில்லியன் டாலர். ஆனால், அறிமுகமாகி 12 ஆண்டுகளிலேயே கிரிப்டோகரன்சியின் மதிப்பு 3 ட்ரில்லியன் டாலராக உள்ளது. இதனால் உலக அரசுகள் கிரிப்டோ கரன்சியை பார்த்து அஞ்சுகின்றனர் என்பதே உண்மை. யாருடைய கட்டுப்பாட்டிலுமே இல்லாத கிரிப்டோகரன்சியே இதற்கு காரணம்.
கிரிப்டோகரன்சி அதிகமான மோசடிகளை கொண்டது. கிரிப்டோ கரன்சி மூலம் பரிவர்த்தனையும் முதலீடுகளையும் செய்வதை நிறைய நாடுகள் ஏற்கவில்லை அது அரசுக்கு புறம்பானது ஆகும். இப்பொழுது வரை யார் இந்த கிரிப்டோ கரன்சியை இயக்குகிறார்கள் என்பது தெரியவில்லை இதனால் எப்படி அதனை தடை செய்ய முடியும் என்ற குழப்பமும் இருக்கிறது.
பிட்காயின்கள் மட்டும்தான் கிரிப்டோ கரன்சி என்று நினைக்கிறோம் ஆனால் அதைத் தவிர நிறைய பிட்காயின்கள் இருக்கின்றன இதில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அப்படி முதலீடு செய்யும் பொழுது எப்படி வேணாலும் விலை ஏறவும் இறங்கவும் செய்யும்.
உதாரணமாக 2017ஆம் ஆண்டு ஒரு பிட்காயினின் விலை சுமார் 20,000 டாலராக இருந்தபோது, ஒரே நாளில் திடீரென மூன்றில் ஒரு பங்கு விலை குறைந்தது. 2018ல் இதன் விலை வெறும் 3,122 டாலர் அளவுக்கு வந்தது.
இந்த பிட்காயின்களை பலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் ஏனென்றால் இது நிறைய மோசடிகளையும் அது இயக்குபவர் வைத்திருக்கும் அக்கவுண்டின் திறவுகோல் ஒருவரிடம் இருப்பதில்லை இதனால் அவர்களின் பிட்காயின்கள் திருடபடவும் வாய்ப்புள்ளது.
சில நேரங்களில் ஏதோ ஒரு வலைதள பக்கங்களில் கிரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்துகின்றனர் அதில் முதலீடும் செய்கின்றனர். கிரிப்டோ கரன்சியின் ஆதரவாளர்கள் அதில் முதலீடு செய்யும் பொழுது அந்த கிரிப்டோவை உருவாக்கியவர்கள் அதை விற்று பணமாக மாற்றி வெளியேறி சென்று விடுகின்றனர் இதனால் கிரிப்டோ கரன்சியின் முதலீடுகளில் நிறைய சிக்கல்களும் ஹாக்கிங்களும் முதலீட்டர்களை இறுதியில் ஏமாற்றத்திலே விடுகிறது.