சைபர் குற்றத்தை தடுக்க இப்போ இருக்க டெக்னாலஜி எவ்வாறு உதவுகிறது..!
Written By : MYTHILI .N 19-10-2024 12:45:32 PMபணக்காரர்களிலிருந்து பாமர மக்கள் வரை இப்போ இருக்க டெக்னாலஜி உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் எல்லோருக்கும் மொபைல் போனை உபயோகப்படுத்த தெரிந்த அளவுக்கு அதை எவ்வளவு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்கவில்லை. காரணம் வளர்ந்து வரும் டெக்னாலஜியோடு அப்டேட் ஆகும் மக்கள் அதில் தங்களையும் தங்களது சொந்த ஆவணங்களையும் எவ்வாறு பாதுகாத்து சேமித்து வைக்க வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர் அல்லது அதை பற்றி அவர்களுக்கு தெரிவதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
"ஆழம் அறியாமல் காலை விடாதே" - இந்த பழமொழி எங்கு உபயோகப்படுகிறதோ இல்லையோ நாம் வாழும் டிஜிட்டல் உலகில் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.
படித்த மாணவர்கள் கூட சைபர் கிரைமில் சிக்கிக் கொள்கின்றனர். பின்பு எப்படி நாம் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சொல்லிக் கொடுப்பது. முதலில் சைபர் கிரைமில் மாட்டிக் கொள்ளாமல் தங்களது சொந்த ஆவணங்களை எவ்வாறு பத்திரமாக சேமித்து வைப்பது, அப்படி சேமித்து வைக்கும் பொழுது இன்றைய தொழில்நுட்பம் எவ்வாறு ஹேக்கர்கள் மூலம் திருடு போகாமல் பாதுகாக்கிறது மற்றும் அவை சைபர் குற்றங்களைத் தடுத்து உருவாக்கப்பட்ட கருவிகள் என்ன என்பதையும் பார்ப்போம்.
ஃபயர்வால் உங்களது கணினியில் இருக்கும் ஒரு கருவி. இது உங்களின் நெட்வொர்க்கிற்கு தேவை இல்லாத notification இல்லனா app சம்பந்தமான ஏதாவது ஒரு செய்தியை உங்களுக்கு அனுப்ப நினைத்தால் அது ஃபயர்வால் என்ற கருவி தடுத்து ஹேக்கர்களை உள்நுழையாமல் பாதுகாக்கிறது.
இது இல்லை என்றால் தேவையில்லாத நெட்வொர்க் ஹேக்கர்கள் நமது கணினியில் உள்ள நமது சொந்த விவரங்களை ஹாக் செய்து விடுவார்கள் அதாவது நம்முடைய பிரைவேட் விவரங்களை நமக்கு தெரியாமலே எடுத்துக் கொள்வார்கள்.
"மால்வேர்" என்பது கணினியில் உருவாகும் வைரஸ் போன்றது இது ஹேக்கர்களை உள்ளே அனுமதித்து நமது பாஸ்வேர்டை திருடுகிறது மற்றும் நமது கணினியை பாழாக்கவும் செய்கிறது. மால்வேர்கள் அதன் உரிமையாளர் பற்றிய தகவல் இல்லாமல் கணினிகளில் நகர்த்தப்படுகின்றன. இது சைபர் குற்றவாளிகளால் எழுதப்பட்ட ஒரு வகை குறியீடு ஆகும்.
இதை நாம் தவிர்ப்பதற்கு சில வழிகள் உள்ளது, தெரியாதவர்கள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள் சமூக வலை பின்னலே இதற்கான முக்கிய காரணமாகும். விசித்திரமான செய்திகள், ஆச்சரியமூட்டும் எச்சரிக்கைகள், நமது ஆர்வத்தை தூண்டும் சலுகைகள் அது என்னவென்று உங்களுக்கு முழு விவரம் தெரியாத பொழுது அதற்குள் நுழைய வேண்டாம். அதாவது இந்த மாதிரி வரும் நோட்டிபிகேஷன் களை அழுத்தி உள்ளே செல்ல வேண்டாம். இது உங்களது கணினி மற்றும் செல்போன் சுலபமாக ஹேக் செய்வதற்கான வழிமுறைகள் ஆகும்.
இதனால் உங்கள் கணினி அல்லது மொபைல் சில சமயங்களில் மந்தமாகவும், செயலிழந்தும் போகும்.
AVG Antivirus FREE போன்ற மால்வேர் எதிர்ப்பு மென்பொருள் உங்கள் PC, Mac அல்லது மொபைல் சாதனத்தைப் பாதிக்கும் முன்பே கண்டறிந்து தடுக்கிறது.
Norton Antivirus: விரைவான ஸ்கேன் மற்றும் விசேட போன்ற பாதுகாப்பு செயல்பாடுகளை வழங்குகிறது.
McAfee: பல்வேறு மால்வேர் வகைகளை கண்டுபிடித்து, நீக்குகிறது.
இதுபோன்ற நிறைய கருவிகள் ஒவ்வொரு விசித்திரமான ஹேக்கிங் செயல்பாட்டுக்கு தொழில் நுட்ப பயன்பாட்டு கருவிகள் நிறைய உள்ளன.
தொழில்நுட்பங்கள் பெருகி வரும் பொழுது அதனுடனே பெருகிவரும் தொழில்நுட்ப பாதுகாப்பு கருவிகளையும் நாம் பயன்படுத்தியே வரவேண்டும் அப்பொழுதுதான் நாம் சைபர் கிரைமில் மாட்டிக் கொள்வதை தவிர்க்க முடியும்.