கணக்கு இல்லாமல் பெருகிவரும் App - களின் வளர்ச்சி..!
Written By : MYTHILI . N 21-10-2024 01:06:09 PMஇன்றைய டிஜிட்டல் உலகில் புதிய செயலிகள் (Apps) மற்றும் அவற்றால் ஏற்படும் வளர்ச்சிகள் உலகில் முழுவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் புதிய App-கள் உருவாகி வருகின்றன. இவை நமக்கு தேவைப்படும் எல்லா விதமான தேவைகளையும் தனித்தனியே ஒவ்வொரு செயலியாக கொண்டுள்ளது.
தேவைபடுவதற்கு ஏற்றார்போல், வேண்டும் அனைத்து தகவலும் ஒரே செயலியின் மூலம் பெற முடிகிறது. சிரமப்பட்டு வேறு எந்த வலைதள பக்கங்களில் இருந்தும் நாம் தேட வேண்டிய அவசியத்தை இன்றைய APP - கள் தவிர்க்கிறது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவையான அனைத்தையும் ஒரு செயலி தீர்த்து வைக்கிறது.
நமக்கு தெரிந்த அனைவரும் அறிந்த, தகவல் பகிரும் செயலிகள் ஏராளம் உள்ளன. அது போன்று ஒரு ஒரு தேவைக்கும் தனி APP கள் உள்ளன, இப்போது உங்களுக்கு வேலை தேவை என்றால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உங்கள் துறை சார்ந்த வேலைகளை பெற்றிடலாம். ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் செயலிகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
இது தேவையான உடற்பயிற்சி திட்டங்கள் மற்றும் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தனி மனிதனுக்கு ஏற்றார் போல் பயனர்களுக்கு உதவுகிறது. நம்மில் பெரும்பாலானோர் GOOGLE DRIVE, DROPBOX போன்ற செயலிகளை பயன்படுத்தி எந்த இடத்தில் இருந்தும் தரவுகளை பெற்றுகொள்கிறோம்.
புதிய செயலிகள் மற்றும் அவற்றால் ஏற்படுத்தும் வளர்ச்சி, பயனர்களை தினசரி வாழ்வில் எளிதாக்குவதோடு, புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்களால், எதிர்காலத்தில் மேலும் புதிய செயலிகள் உருவாகும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதனால் நமது வாழ்க்கை மேலும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.