அந்த NIGHTMODE, EYEPROTECTION - குலாம் கொஞ்சம் உயிர் குடுங்கப்பா..!
Written By : MYTHILI . N 22-10-2024 12:31:05 PMநாம் அனைவரும் தினசரி வாழ்கையில் செய்ய பழகி போன ஒரு விஷயம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடுவில் இருக்கும் இளைஞர்களை சொல்லாமல் எப்படி அனைவரும் மொபைல்போன்களை உபயோகிக்கிறோம்.
நாள் தவறாமல் இக்கடமையை செய்யும் நாம் நமது கண்களையோ, மொபைல் போன்களை பார்ப்பதால் ஏற்படும் தலைவலி பிரச்சினைகளை நாம் கவனிப்பதில்லை. அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரு சின்ன விஷயத்த செய்தாலே போதும்.
நம்ப எல்லாறோட போன்லையுமே இருக்கும், Eye protection, Night Mode அல்லது Warm Color Shift என்ற அம்சம் இருக்கும். இது போன்களின் நீல ஒளியை குறைத்து கண்களைப் பாதுகாக்க உதவுகிறது.
பலருக்கு கண் வழி, எரிச்சல், தலைவலி , கண் மங்கலாக தெரிவது என பல பிரச்சனைகளில் இருப்போம். அதற்கு முதல் காரணம் மொபைல் போன்களை கால நேரம் இன்றி உபயோகம் செய்வதாலே, நம்மால் முடிந்த இந்த சில அம்சங்களை நாம் பயன் படுத்தினால் போதும் பாதுகாப்பாக இருக்கலாம்.
மொபைல் திரையின் அதிகமான வெளிச்சம் மற்றும் நீல ஒளி கண்களுக்கு இடையூறு விளைவிக்கும். நீல ஒளி கண்பார்வைக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளையும் உருவாக்குகிறது.
புதிய மொபைல்களில் உள்ள AMOLED மற்றும் OLED திரைகள் உயர் தரமான நிறங்களை வழங்குவதோடு, வெளிச்ச அளவுகளை சீராகக் வைக்கிறது. இதனால் கண்களுக்கு ஏற்ற மெல்லிய திரை வெளிச்சம் கிடைக்கிறது.
நீண்ட நேரம் மொபைல் திரைகளைப் பார்க்காமல், இடையே சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொள்வதால் கண்களைச் சோர்வடையாமல் பாதுகாத்து கொள்ள இயலும்.
மொபைல்களை மிக அதிக வெளிச்சத்தில் அல்லது இரவில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் கண்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறையும்.
இதுபோன்று காலை எழுந்த உடனும் மொபைல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நீண்டநேர ஓய்வுக்கு பின் கண்கள் ஒளியை சந்திக்கும் போது அது வெகுவாக பர்வையை மங்க வைக்கிறது.
மொபைல் சாதனங்கள் நம் வாழ்வின் தவிர்க்கமுடியாத பகுதியாக ஆகிவிட்டன. எனவே, கண்களுக்கு பாதுகாப்பான மொபைல் திரைகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள, ஏற்ற வகையில் உபயோகப்படுத்தினாலே இதுப்போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.