ஓட்டாம கார் எப்படி ஓடும், ஓடும் CYBERCAB ஓடும்..!
Written By : MYTHILI . N 24-10-2024 04:24:23 PMஉண்மையாவே இது சாத்தியமா.? மனிதர்களால் இப்படியும் ஒரு விஞ்ஞானத்தை கொண்டு வர முடியுமா. அப்படின்ற அளவுக்கு தான் அறிவியலாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் கூட வியக்க வச்சிருக்காரு testla மற்றும் spaceX நிறுவனர் எலான் மஸ்க்.
எலக்ட்ரிக்கல் கார்கள் தயாரிப்பில் ஏற்கனவே நிறைய சாதனைகளை புறிஞ்சிகிட்டு இருக்க எலான் மஸ்க் இப்போ தானியங்கி கார் ஒன்றை கண்டுபிடித்து இருக்காரு .
தானியங்கி கார்கள் ஏற்கனவே நிறைய இருக்கு. அதுல பிரேக், அக்ஸிலெட்டர் அந்த காரே ஆட்டோமேட்டிக் மென்பொருளால இயக்கிகிட்டாலும் இதை முழுசா ஒரு மனுஷன் கண்காணிக்கிற வகையில தான் இருக்கு. இப்போ அறிமுகப்படுத்தி இருக்க சைபர்கேப் காருக்கு ஓட்டுனரோ இல்ல மனிதனோட கண்காணிப்போ தேவையே இல்லை.
ஸ்டியரிங், பிரேக், அக்ஸிலெட்டர், பெடல் எதுவுமே இல்லாம முழுசா அந்த காரே சென்சார் மூலம் செயல்படுது.
எலான் மஸ்க் கூறுகையில், இந்த கார் சாதாரண ஓட்டுனரை விட பத்து மடங்கு பாதுகாப்பானது. அதிநவீன AI கேமராக்கள் மற்றும் சென்சார்கள் சார்ந்து இயக்கப்படுகிறது. இந்த காரின் உள்ளே ஏறி அமர்ந்து கொண்டால் போதும் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அது சரியாக சென்று விடும். இது தானியங்கி கார்களை விட சற்று மாறுதலான நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கு.
மக்களின் பயன்பாட்டிற்கு வந்த பிறகு உரிமையாளரின் பயன்பாட்டிற்கு இல்லாத நேரத்தில் மற்றவர்களுக்கு வாடகைக்கு அனுப்பியும் சம்பாதிக்கலாம். இதற்காக ஒரு APP அறிமுகப்படுத்தபடும்.
கார் தேவைப்படுபவர்கள் APP இல் புக் செய்தால் போதும் அவர்களின் வீட்டிற்கு கார் சென்று விடும். இதனால் உரிமையாளர்கள் பணம் சம்பாதிப்பதற்கான வழியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு மைல் தூரம் செல்வதற்கு 20 செகண்ட் ஆகும், என்றும் இதனால் நேரத்தை மிச்ச படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். பயணம் செய்ய 0.20 டாலர் மட்டுமே செலவாகும். இதனால் குறைந்த விலையில் அதிநவீன செயல்பாட்டை அனுபவிக்க முடியும்.
2026 ஆம் ஆண்டு CYBERCAB காரை தயாரித்து மக்களுக்கு சென்றடையும் வகையில் அதிக எண்ணிக்கையில் தயாரிக்க போவதாகவும் இந்த கார் விற்பனைக்கு வரும்பொழுது 30 ஆயிரம் டாலர்கள் மிக்க விலைகளில் வரும் என்று எலான் மஸ்க் கூறினார்.