"SIM இல்லாமல் இனி ஃபோன் பேசலாம்" வியக்க வைத்த BSNL நிறுவனம்..!
Written By : MYTHILI . N 13-11-2024 04:20:43 PMஎவ்வளவு பெரிய நிறுவனங்களும் புதிய போன்களை அறிமுகம் செய்தாலும் சில சமயம் சிக்னல் கோளாறுகளால் ஃபோன் அழைப்பதும் வரும் அழைப்பை எடுப்பதும் சிக்கலில் தள்ளுகிறது. அப்பொழுது வரும் கோபம் போனை உடைத்து விடலாம் என தோன்றும்.
எங்கு சென்றாலும் சிக்னல் கிடைக்கும், இது புது மாடல் என நிறுவனங்கள் அனைத்தும் ஒவ்வொரு ஃபோன் மாடல்கள் அறிவிப்பின் போதும் சொல்லும் ஒரு தாரக மந்தரம் தான் இது. ஆனால் நாம் எல்லோரும் அறிந்தது சிறிய மலை, கரடு போன்ற பகுதிகளுக்கு சென்றாலும் கூட செல்போன் டவர் கட் ஆகிவிடும்.
மாத கட்டணத்தை உயர்த்துவதில் ஜியோவும், ஏர்டெல் நிறுவனமும் முந்தி அடித்து கொண்டு செல்கிறது. இந்த இடத்தில் தான் BSNL நிறுவனத்துக்கு தங்கள் மொபைல் எண்ணை PORT செய்துகொண்டிருந்தார்கள். 5ஜி சேவை இல்லை என்றாலும் காசு இல்லாத காரணத்தால் BSNL நிறுவனத்தை அணுகினார்கள்.
90% மக்கள் ஜியோ அல்லது ஏர்டெல் சிம்கார்டே உபயோகிக்கின்றன. ஒரு பிராண்ட் ஆகவே மாறிய இந்நிறுவனங்கள் தொடக்கத்தில் நிறைய ஆஃபர்களை வாரி வழங்கியாதே மக்கள் ஜியோவை நாடியதற்கு காரணம். தற்போது அடுத்த கட்டமாக D2D என்னும் தொழில்நுட்பத்தை இறக்கி கடும் போட்டியை தொடங்க உள்ளது BSNL நிறுவனம். சிம்கார்டே இல்லாமல் WIFI மூலம் தொடர்பு கொள்ள முடியும்மென BSNL நிறுவனம் அறிவித்துள்ளது.
Direct-to-Device (D2D) என்னும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நெட்வொர்க் இல்லாத இடங்களில் இருந்தும் கூட உங்களால் எமெர்ஜென்சி தொலைப் பேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். சேட்டிலைட்டையே பெரிய டவர்களாக இந்த வசதிக்கு பயன்படுத்தவிருக்கிறது BSNL . செல்ஃபோன் சிக்னல் இல்லாத இடங்களில் WIFI சிக்னலை வைத்து கால் செய்யும் வசதியை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. சிக்னல், WIFI என இரண்டும் இல்லாவிட்டாலும் இந்த D2D மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்கிறது BSNL . வெறுமனே கால் வசதி மட்டும் இல்லையாம். UPI மூலம் பண பரிமாற்றங்களையும் இந்த தொழில்நுட்பம் மூலம் பெறமுடியும் என்கிறது BSNL .
இயற்கை பேரழிவுகள் வாடிக்கையாகிவிட்ட இன்றைய நிலையில் இந்த வசதி அதிக அளவில் பயனளிக்கும் என உறுதியளிக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். VIASAT உடன் இணைந்து இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது BSNL . மக்கள் பயன்பாட்டுக்கு இது எப்போது வரும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வரும் மாதங்களில் 5ஜி சேவையும் BSNLல் வரவிருப்பதால், BSNL பயனாளர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.