திருமண வீடியோக்களை OTT தளங்களுக்கு விற்பனை செய்யும் நடிகர் – நடிகைகள்..!
Written By : MYTHILI . N 29-11-2024 07:34:52 PMதிருமணத்துக்கு என்று தனி பட்ஜெட் போட்டு திருமணம் நடத்தும் நமக்கு மத்தியில் நடிகர், நடிகைகளின் திருமண வீடியோ எடிட்டிங் செய்து OTT தளங்களுக்கு பல கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை செய்து பணம் பார்க்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்போடு நாமும் OTT தளங்களுக்கு சென்று வீடியோவை பதிவிறக்கம் செய்து பார்க்கிறோம். சமீபத்தில் நயன்தாரா விக்னேஷ் தம்பதியின் திருமண வீடியோ ஓடிடியில் வெளியானது. பல பிரச்சனைகளுக்கு பிறகு அவர்களின் திருமண வீடியோ OTT நிறுவனமான Netflix க்கு 50 கோடிக்கு அவர்கள் விற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
OTT தளங்களில் வருவதால் பெரும்பாலானோருக்கு பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. ரகசியமாகவே திட்டமிட்டு நடத்தப்படும் திருமணம் நம்மை ஆச்சரியபட வைத்தாலும் அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் வெகுவாக எழுவதும் உண்மையே.
இதனை அடுத்து நடிகை சோபிதா துளிபாலா திருமண நிகழ்ச்சியையும் ஓடிடிட்டுக்கு விற்றதாக கூறப்படுகிறது. நாக சைதன்யாவுக்கு ஏற்கனவே சமந்தாவுடன் ஏற்கனவே திருமணம்
நடைபெற்று விவாகரத்து செய்துவிட்டனர். தற்பொழுது நடிகை சோபிதா துளிபாலாவுடன் காதல் வயபட்டார் சைதன்யா. சோபிதா துளிபாலா தமிழில் பொன்னியன் செல்வம் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் துளிபாலா சைதன்யா திருமணம் ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் அடுத்த மாதம் டிசம்பர் 4 தேதி நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை ஓடிட்டி தளத்துக்கு 50 கோடிக்கு விற்று இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது.
இப்படி தங்களது திருமண வீடியோக்களை ஓடிடி தளங்களுக்கு விற்று பல கோடி ரூபாய்களை திரைய பிரபலங்கள் சம்பாதித்து வருகின்றன.
இது எங்க இருந்து தொடங்கியது என்று பார்த்தால் ஹன்சிகா மோத்வானி, நயன்தாரா,ஆலியா பட்,கத்ரீனா கைஃப், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியவர்கள் அடங்குவர். இவர்களில் பெரும் தொகையை ஈட்டிய ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடிகளின் திருமண வீடியோ சுமார் ரூ 90 முதல் ரூ 110 கோடிக்கு விற்றதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.